Theme Check

தமிழ் திரைப்பட இயக்குநர் காலமானார்..!

தமிழ் திரைப்பட இயக்குநர் காலமானார்..!

தமிழ் திரைப்பட இயக்குநர் காலமானார்..!
X

திரைப்பட இயக்குனர் பாபா விக்ரம் காலமானார். அவருக்கு வயது 82. அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று (9-ம் தேதி) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில், மீனா பிரேம்குமார் நடித்த ‘கண்ணம்மா’ படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ்.எஸ்.பாபா விக்ரம். 2005-ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
Kannamma Full Movie HD Quality Video Part 1 - YouTube
அந்தப் படத்தைத் தொடர்ந்து, கருணாஸ், கோவை சரளா, நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த ‘பொம்மை நாய்கள்’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். தற்போது, இமான் அண்ணாச்சி நடிப்பில் ‘அதிா்ஷ்டம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வந்தார்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று (9-ம் தேதி) காலை 11 மணியளவில் ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது.

இயக்குநர் பாபா விக்ரம், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it