தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம்.. நாளை வெளியாகிறது பட்டியல்..!
தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம்.. நாளை வெளியாகிறது பட்டியல்..!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சியில் நிர்வாகிகள் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் மாற்றப்படாமல் அப்படியே செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சரியாக பணி செய்யாத 8 மாவட்ட பாஜக தலைவர்களை மாற்றி அமைத்து, அவர்களுக்கு பதிலாக புதிதாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நாளை (30-ம் தேதி) மாநில மைய குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்திற்கு பிறகு, மாநில நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதேபோல, பாஜகவில் உள்ள மாவட்ட தலைவர்கள் அணி பிரிவு நிர்வாகிகளின் பட்டியலும் மாற்றத்துடன் வெளியாக வாய்ப்பு உள்ளது.

