Theme Check

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு பறந்தது புதிய உத்தரவு..!

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு பறந்தது புதிய உத்தரவு..!

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு பறந்தது புதிய உத்தரவு..!
X

“மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, கடந்த 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வர் அண்ணாவால் பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு நாள் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பள்ளிகளில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடுவது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இதையடுத்து, தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகள் தயார் செய்து அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான சுவரொட்டிகள் செய்தி மக்கள் தொடர்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு அவை மின்னஞ்சல் மூலமாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றை, ஜூலை 18-ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகளில் காட்சிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
Share it