நிதி அகர்வால்க்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்கள் !!
நிதி அகர்வால்க்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்கள் !!

தமிழகத்தில் குஷ்பு, நமீதா வரிசையில் அறிமுக நடிகை ஒருவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர். ரசிகர்கள் இந்த முயற்சியால் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளாதாக கூறியுள்ளார் அந்த நடிகை.
ஆந்திராவைச் சேர்ந்த நிதி அகர்வால், தமிழில் ‘பூமி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ என்கிற படத்திலும் அவர் நடித்திருந்தார். இரண்டு படங்களும் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அப்படங்களில் நடித்த நிதி அகர்வால் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வாலுக்கு காதலர் தினத்தில் தனியாக கோயில் கட்டியுள்ளனர் ரசிகர்கள் சிலர். அவருடைய சிலைக்கு பாலாபிஷகம் செய்து, மாலை சார்த்தி, கற்பூரம் காட்டி வழிபாடும் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, வைரலாகி வருகிறது.
தமிழக ரசிகர்களின் செயலை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ள நிதி அகர்வால், தமிழகத்தில் எனக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதான் காதலர் தின பரிசாகும். எனக்காக கோயில் கட்டி, அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

