Theme Check

தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
X

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் 8 விசைப் படகுகளையும் மீட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fishermen

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 43 மீனவர்களுடன், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.

இந்தநிலையில் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து 12 மீனவர்களை கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it