Theme Check

குடும்ப அட்டைதாரர்களுக்கு – தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு – தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு – தமிழக அரசு புதிய அறிவிப்பு!!
X

தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், டோக்கன் வாங்கத் தவறியவர்கள் தொகுப்பினை 10ஆம் தேதிக்கு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அந்த வகையில் இன்று முதல் நியாய விலைக்கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

அதற்கு முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

pongal cm

தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்பு தொகுப்பு தரமான பொருட்களாக வழங்கப்பட வேண்டும் எனவும், திட்டத்தை ஒருங்கிணைந்துசெயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

pongal cm

ஜனவரி 7ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் தொகுப்பு டோக்கன் வாங்க தவறியவர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள் ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகை முடிந்த பிறகும் கூட பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it