Theme Check

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம்- தமிழக அரசு புதிய உத்தரவு !!

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம்- தமிழக அரசு புதிய உத்தரவு !!

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம்- தமிழக அரசு புதிய உத்தரவு !!
X

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா, அதன் திரிபான ஒமைக்ரான் வைரஸ் காரணமாக பரவல் காரணமாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி (இன்று) வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

school

இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது இரவு நேர ஊரடங்கை ரத்து, ஞாயிற்றுக்கிழமை ஊரடஙகு ரத்து, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகங்களும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், பள்ளி வருவது கட்டாயமா? இல்லையா? என ஒரு குழப்பம் நிலவியது.

school

இந்நிலையில், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்றும், மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பின் மாணவர்கள் வராமல் இருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

newstm.in

Next Story
Share it