தமிழ்நாட்டிற்கு தினமும் 10 ஆயிரம் டன் நிலக்கரி தேவை - ஒன்றிய அரசுக்கு செந்தில்பாலாஜி கோரிக்கை..!!
தமிழ்நாட்டிற்கு தினமும் 10 ஆயிரம் டன் நிலக்கரி தேவை - ஒன்றிய அரசுக்கு செந்தில்பாலாஜி கோரிக்கை..!!

டெல்லியில் ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்குடன் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சந்தித்தார். சந்திப்பின்போது எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அந்த மனுவில், மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தமிழ்நாட்டிற்கு தினமும் 10,000 டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும், ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான வட்டியை 8.50 சதவீதம் ஆக நிர்ணயிக்க வேண்டும்.
ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள ஒரே அரசியல்வாதி தங்கமணி மட்டும் தான். வடசென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் நிலக்கரி காணாமல் போயுள்ளது என்றார்.

