Theme Check

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் தமிழக வீரர் நடராஜன் !!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் தமிழக வீரர் நடராஜன் !!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் தமிழக வீரர் நடராஜன் !!
X

கொரோனா தொற்றை வெல்லும் மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. எனினும் தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தவறான தகவலால் ஆரம்பத்தில் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் பெரிதாக முன்வரவில்லை. எனவே தடுப்பூசி குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், இன்று காலை நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு என்னுடைய அளவிடமுடியாத நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.



Tags:
Next Story
Share it