Theme Check

தமிழக விஞ்ஞானி சாதனை!! சுனாமி பற்றிய கருவிக்கு உலக விஞ்ஞானிகள் அங்கீகாரம்!

தமிழக விஞ்ஞானி சாதனை!! சுனாமி பற்றிய கருவிக்கு உலக விஞ்ஞானிகள் அங்கீகாரம்!

தமிழக விஞ்ஞானி சாதனை!! சுனாமி பற்றிய கருவிக்கு உலக விஞ்ஞானிகள் அங்கீகாரம்!
X

தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த தமிழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சுனாமியை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கும் நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ரா.வெங்கடேசன் தலைமையில், மா.அருள் முத்தையா, அர.சுந்தர், கி.ரமேஷ் ஆகிய 4 தமிழ் விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடல் படுகையில் ஏற்படும் நிலநடுக்கத்தின் விளைவாக உருவாகும் சுனாமியைக் கண்டறிய உதவும் மிதவைகளை உருவாக்கியுள்ளனர். இதற்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது.

இதுகுறித்து ரா.வெங்கடேசன் கூறியதாவது; “இந்தக் கருவி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நவீன, தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் இக் கருவியில் உள்ளன. இதன் சுனாமி பற்றிய தரவுத் தொகுப்புகள் செயற்கைக்கோள் மூலம் ஒரே நேரத்தில் என்ஐஓடி தரவு மையம் மற்றும் இன்காய்ஸ் (INCOIS) சுனாமி எச்சரிக்கை மையத்துக்கு அனுப்புகின்றன.

மேலும் இந்த தரவுத் தொகுப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் பகிரப்படுகின்றன. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியா சுயசார்புடன் சுனாமி மிதவையை வடிவமைத்து நிறுவியுள்ளது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காலத்திலும் இந்த மிதவையை பராமரிக்க என்ஐஓடி விஞ்ஞானிகள் ஆழ்கடலில் பயணம் செய்து வருகின்றனர்.

இத்தகைய மிதவையைக் கண்டுபிடித்ததற்காக ‘நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு முறை’ (REAL TIME TSUNAMI MONITORING SYSTEM) என்ற தலைப்பில், எங்கள்குழுவுக்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழக இயக்குநர் க.ராமதாஸ் கூறும்போது, “கடல்சார் தொழில்நுட்பக் கழகம், கடல் பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சுனாமி வருவதை முன்கூட்டிய அறிந்து எச்சரிக்கும் இந்தக் கருவி.

ஒரு கருவி நன்றாக ஆய்வு செய்தாலும், அதன் தரவுகள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும். இந்தக் கருவியின் சிறப்பே தகவல்தொடர்புதான். இதற்கு இந்திய காப்புரிமை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக உழைத்த எங்கள் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Tags:
Next Story
Share it