Theme Check

தமிழக பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு உள்ளனர்.. பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு..!

தமிழக பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு உள்ளனர்.. பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு..!

தமிழக பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு உள்ளனர்.. பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு..!
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெள்ளக்கோட்டை, புளியம்பட்டி, சிவன் கோயில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி பேசியதாவது; “அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். அவர்கள் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு இருக்கின்றனர்' - கனிமொழி |  Kanimozhi said that it is up to the women to decide what they should wear |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News |
திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு 4 ஆயிரம் ரூபாய் என 2 கோடி குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார் முதலவர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் திமுக. பாஜகவையும், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவை பற்றியும் மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு இருக்கின்றனர். ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் அப்படி இல்லை. பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கனிமொழி கூறினார்.
Next Story
Share it