Theme Check

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு.. தச்சன்குறிச்சியில் தொடங்கியது..!

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு.. தச்சன்குறிச்சியில் தொடங்கியது..!

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு.. தச்சன்குறிச்சியில் தொடங்கியது..!
X

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு, ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசு புதிதாக விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறை படியும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் இன்று காலை தொடக்கம்
அதன்படி, இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசின் கொரோனா வழிகாட்டுதலின்படி, 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் இருந்தால் மட்டுமே களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இப்போட்டி அரசு வழிகாட்டுதலின்படி 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story
Share it