Theme Check

தன்னைத் தானே தலையில் சுட்டு கொண்ட தமிழக துப்பாக்கி சுடும் வீரர்! திருச்சியில் அடுத்தடுத்த அதிர்ச்சி!!

துப்பாக்கி சுடும் வீரர் சசிகுமாருக்கு தன் அறையில், தன் தலையில் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். திருச்சி விமான நிலையம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது சசிகுமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

தன்னைத் தானே தலையில் சுட்டு கொண்ட தமிழக துப்பாக்கி சுடும் வீரர்! திருச்சியில் அடுத்தடுத்த அதிர்ச்சி!!
X

துப்பாக்கி சுடும் வீரர் சசிகுமாருக்கு தன் தலையில் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். திருச்சி விமான நிலையத்தின் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி விமான நிலையம் அருகே சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் (30). துப்பாக்கி சுடும் வீரரான சசிகுமார், சொந்தமாக ரைபில் கிளப் வைத்தும் நடத்தி வந்தார். திருச்சியில் பலருக்கும் இவர் துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்து வந்தார்.

தன்னைத் தானே தலையில் சுட்டு கொண்ட தமிழக துப்பாக்கி சுடும் வீரர்! திருச்சியில் அடுத்தடுத்த அதிர்ச்சி!!

இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் இருந்து திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பலத்த வெடிசத்தம் கேட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது சசிகுமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே கிடந்தார். உடனடியாக ரத்த வெள்ளத்தில் இருந்த சசிக்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் துறை ஆய்வாளர் பெரியசாமி விசாரணை மேற்கொண்டார். இறந்த சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், சசிகுமார் உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்துள்ளார் என்றும், அவரது நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டதால், சசிகுமாரின் நெற்றி பொட்டில் துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளது என்றும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றனர். மேலும், வேறு யாரேனும் சசிக்குமாரை சுட்டார்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால், காரில் கடத்தி, கற்பழிக்கப்பட்டு, ஓடும் காரில் இருந்து தூக்கி சாலையில் வீசப்பட்டிருக்கிறார். திருச்சியில் நடந்த இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சசிக்குமாரன் மரணம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தொடரும் அசம்பாவிதங்களும், அதிகரிக்கும் குற்ற செயல்களும் போலீசாரை நிலைகுலையச் செய்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it