ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக எச்சரிக்கை
மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் செயல்பாடு அவரது அறியாமையை காட்டுவதாகவும், அவரது எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி வன்முறை தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் செயல்பாடு அவரது அறியாமையை காட்டுவதாகவும், அவரது எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி வன்முறை தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஆட்சி செய்ய முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்றும் கடுமையாக பேசியிருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ரஜினிகாந்த் உளவுத்துறை செயல்படவில்லை என்று கூறுவதும், மத்திய அரசைக் கண்டிப்பதும் சரியான விமர்சனங்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

யாரையோ திருப்திப்படுத்தவே ரஜினி இப்படிப் பேசியிருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ள எஸ்.ஆர்.சேகர், நடுநிலைமை எனக் காட்டுவதற்காக ரஜினி இப்படிச் சொல்லி இருக்கலாம், ஆனால், இது நடுநிலைமை அல்ல, ஒரு சார்பு நிலைமை என விமர்சித்துள்ளார். வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என ரஜினி பேசியிருப்பது மலிவான அரசியல் என்றும் எஸ்.ஆர்.சேகர் சாடியுள்ளார். மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அறியாமை அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in

