Theme Check

”தனியா போறியே எதாவது ஆபத்துனா 181க்கு கால் பன்னு”- மீம்ஸ் மூலம் அசத்தும் தஞ்சை காவல்துறை !!

”தனியா போறியே எதாவது ஆபத்துனா 181க்கு கால் பன்னு”- மீம்ஸ் மூலம் அசத்தும் தஞ்சை காவல்துறை !!

”தனியா போறியே எதாவது ஆபத்துனா 181க்கு கால் பன்னு”- மீம்ஸ் மூலம் அசத்தும் தஞ்சை காவல்துறை !!
X

தமிழகத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றச்சம்பவங்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றனர். எனினும் ஒருசில சம்பவங்கள் நடப்பதால் மக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு வகைகளிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் மக்களிடையே எளிதில் சென்றடையும் தற்கால ஆயுதமான சமூக வலைதளங்களையும் மீம்ஸ்களையும் கையில் எடுத்துள்ளது காவல்துறை. அதில் வீடியோக்கள், அறிவிப்புகள், மீம்ஸ்கள் என அனைத்தையும் நெட்டிசன்களுக்கு இணையாக பதிவுகளை இட்டு மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

police

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், செல்போனில் தவறான அழைப்புகளை மேற்கொண்டு பணம் பறித்தல், ஆபாசமாக பேசுதல், வேலை மோசடி போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள இலவச அழைப்பு எண்ணை அறிமுகம் செய்துள்ளதோடு அதனை மீம்ஸ் வாயிலாக மக்களிடம் சென்றடையச் செய்கின்றனர்.

அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட template-ஐ வைத்து விழிப்புணர்வு மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். அந்த மீம்ஸ்களுக்கு இணையவாசிகளிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த மீம்ஸ் பதிவுகளில் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்தும் புகார்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் மக்கள் விழிப்படைவார்கள் என்றும் ஏதேனும் தவறு நடப்பதாக உணர்ந்தால் உடனே காவல்துறைக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க இந்த விழிப்புணர்வு உதவும் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

newstm.in


Next Story
Share it