Theme Check

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
X

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில், சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 1-ம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

இதன்படி, இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சுங்கக் கட்டண உயர்வு அறிவிப்பு வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story
Share it