இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்! காரணம் இதுதான்!!
இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்! காரணம் இதுதான்!!

தமிழகம் முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் குறிப்பிட்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று 268 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி மற்றும் அதன் 5 கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்தில் உள்ள, மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. எனவே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
newstm.in

