இந்த இடங்களில் டாஸ்மாக் கூடாது.. அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
இந்த இடங்களில் டாஸ்மாக் கூடாது.. அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்தப் பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை. சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும்’ என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதை ஏற்று வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், ‘வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது. சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டனர்.
Next Story

