Theme Check

டாடாவின் புதிய 'அனுபவ்' திட்டம்.. உங்கள் வீடு தேடி வரும் கார் !!

டாடாவின் புதிய 'அனுபவ்' திட்டம்.. உங்கள் வீடு தேடி வரும் கார் !!

டாடாவின் புதிய அனுபவ் திட்டம்.. உங்கள் வீடு தேடி வரும் கார் !!
X

டாடா (Tata Motors) நிறுவனம் புதிய 'அனுபவ்' (Anubhav) திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அந்நிறுவனம் தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால், வீட்டு வாசலுக்கே வந்து காரை விற்பனைச் செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பிரத்யேகமாக கிராமப் புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த சேவையை டாடா தொடங்கியுள்ளது.

அதாவது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையகங்கள் நகர்புறங்களில் மிக அதிகளவில் உள்ளன. இதேபோல் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகர்புறங்களில்கூட நிறுவனத்தின் விற்பனையகங்கள் கணிசமான அளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களை கவர் செய்யும் வகையில் நிறுவனத்தின் விற்பனையகங்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றது.

tata moters

இந்த நிலை களையும் பொருட்டே நிறுவனம் அனுபவ் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த திட்டத்தை 'ஷோ-ரூம் ஆன்-வீல்' என்றும் கூட கூறலாம். கார் விற்பனையாளர்கள் ஷோரூமை பிரதிபலிக்கக் கூடிய ஓர் வாகனத்தில் வந்தே புது வாகன விற்பனையில் ஈடுபட இருக்கின்றனர்.

இதற்காக நிறுவனம் ஒட்டுமொத்தமாக 103 மொபைல் ஷோரூம்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். இவை ஏற்கனவே செயல்பட்டு வரும் கார் விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். மொபைல் ஷோரூம்கள் கார் விற்பனை மட்டுமின்றி டாடா நிறுவனத்தின் கார்களுக்கான அக்ஸசெரீஸ் விற்பனை, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய உதவுதல், கடன் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் இதன்மூலம் மேற்கொள்ள இருக்கின்றது.

tata moters

இதுதவிர, டாடாவின் அனைத்து வாகன தயாரிப்புகள் பற்றிய தகவலையும் இங்கு நம்மால் அறிந்துக் கொள்ள முடியும். மேலும், டெஸ்ட் டிரைவிற்கான புக்கிங் மற்றும் டாடா கார்களில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலையும் பெற்றுக் கொள்ள முடியும்.
டாடாவின் இன்ட்ரா வி10 மினி ட்ரக்குகளே நடமாடும் ஷோரூம்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

newstm.in

Next Story
Share it