Theme Check

பெட்ரோல், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.7 குறைப்பு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !

பெட்ரோல், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.7 குறைப்பு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !

பெட்ரோல், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.7 குறைப்பு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !
X

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவில் உள்ளது. எனினும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றன.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை தாண்டிவிட்டது. அதேபோல் டீசல் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் மேகாலயத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.92.90-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.86.23-க்கும் விற்பனையானது. தொடா் விலை உயா்வுக்குப் பல்வேறு தரப்பினா் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதாக மாநில அரசு கடந்த வாரம் அறிவித்தது.

எனினும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து உயா்த்தின. அதைக் கண்டித்து மேகாலயத்தில் வணிகப் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி, அந்த மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை லிட்டருக்கு ரூ.7 வரை மேகாலய அரசு குறைத்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it