Theme Check

போதைப் பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த டீ கடை..!! கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.!

போதைப் பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த டீ கடை..!! கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.!

போதைப் பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த டீ கடை..!! கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.!
X

ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு மார்கங்களில் தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்படும் குட்கா, மாவா போன்ற போதைப் பொருட்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குட்கா, மாவா போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் பகுதியில் உள்ள வள்ளுவர் சாலையில் வட மாநில நபரான ரோஹித் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில் மாவா என்ற போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இளைஞர்கள் பலரும் இவரின் கடைக்கு டீ குடிக்க வருவதுபோல் வந்து மாவா வாங்கிச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மேலும், இந்தக் கடையில் சட்ட விரோதமாக 25 ரூபாய்க்கு மாவா விற்பனை செய்யப்படுவது குறித்து வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி கோயம்பேடு போலீசாரிடம் புகார் அளித்தும் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில் டீக்கடையில் மாவா விற்பனை நடைபெறுவதை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்த விடியோப் பதிவுகள் சமூக வலைதாலங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Next Story
Share it