Theme Check

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை அதிரடி கைது !!

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை அதிரடி கைது !!

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை அதிரடி கைது !!
X

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கடந்த 24ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. சர்வதேச அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளான இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இந்திய வீரர் ஷமி மீது ஒரு தரப்பினர் அவதுறு பரப்பினர். எனினும் அவருக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள், இன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் சிலர் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை நபீசா அட்டாரி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டார்.

teacher arrested

இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்து பள்ளி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

அதேபோல், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பல்கலையில் படிக்கும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் பாக்., வெற்றியைக் கொண்டாடினர். அதையடுத்து அவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது ஆக்ரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it