காப்பி அடித்ததை கண்டித்த ஆசிரியர்.. தூக்கு மாட்டி பள்ளி மாணவன் தற்கொலை..!
காப்பி அடித்ததை கண்டித்த ஆசிரியர்.. தூக்கு மாட்டி பள்ளி மாணவன் தற்கொலை..!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதியின் மகன் தீரஜ் (13). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வு நடைபெற்றது. அப்போது, அருகில் இருந்த சக மாணவனை பார்த்து காப்பி அடித்து தீரஜ் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
இதை கவனித்த அங்கிருந்த ஆசிரியர், தீரஜை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியதுடன், அவருடைய பெற்றோரை அழைத்து பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார்.
இதனால் மாணவன் தீரஜ் வேதனை அடைந்தார். வீட்டுக்கு வந்த தீரஜ், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

