பள்ளி மாணவர்களை ரம்ஜான் நோன்பு இருக்க கூடாது என கண்டித்த ஆசிரியர்கள்.!!
பள்ளி மாணவர்களை ரம்ஜான் நோன்பு இருக்க கூடாது என கண்டித்த ஆசிரியர்கள்.!!

வேப்பனஹள்ளி அருகே கொரல்தந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் ரமலான் நோன்பை ஒட்டி மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு அருந்தாமல் நோன்பில் இருந்துள்ளனர். இதற்கு தடை கூறிய பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, நோன்பு இருப்பதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமாரும் மதரீதியாக இழிவுப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பள்ளி நிர்வாகத்தின் செயலால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

