கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்த ரசிகர்.. ஆள்மாறாட்டத்தால் கடுப்பான நடிகர் சித்தார்த் !

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்த ரசிகர்.. ஆள்மாறாட்டத்தால் கடுப்பான நடிகர் சித்தார்த் !

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்த ரசிகர்.. ஆள்மாறாட்டத்தால் கடுப்பான நடிகர் சித்தார்த் !
X

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் இவர் நடித்து பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கப்பட்டதை பார்த்து நடிகர் சித்தார்த் அதிர்ச்சி அடைந்தார்.

சமூக வலைத்தள பக்கத்தில் அரசியல் ரீதியாகவும் சமூக கருத்துக்களையும் கூறி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

siddarth

அத்துடன் குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார். சிலரோ இது தவறுதலாக நடத்திருக்கும் என தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகரும் பிக்பாஸ் 13 வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா நேற்று காலமானார். 40 வயதே ஆகும் மும்பையில் காலமானார். அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அண்மையில் கன்னட நடிகை சோனியா அகர்வால் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் பலரும் தமிழ் நடிகை சோனியார் அகர்வால் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிவந்த நிலையில் அதற்கு அவரே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:
Next Story
Share it