சிம்பு, ஹன்சிகா நடிப்பில் ‘மஹா’ படத்தின் டீசர் வெளியீடு!
சிம்பு, ஹன்சிகா நடிப்பில் ‘மஹா’ படத்தின் டீசர் வெளியீடு!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் ‘மஹா’ படம் உருவாகியுள்ளது. ஹன்சிகாவின் 50-வது படமான மஹாவை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
ஹன்சிகாவை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்புவை உள்ளே கொண்டு வந்தனர். ஆனால் படத்தின் மீது சிம்பு காட்டிய ஆர்வத்தை பார்த்து அவர் வரும் காட்சிகளை அதிகரித்து, ஒரு பாடல் காட்சியும் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட பாதி படத்தில் சிம்பு வருவது போல் அவர் கதாபாத்திரத்தை மாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில், மஹா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘மஹா’ படத்தின் டீசர் இந்த படம் ஒரு தீவிர த்ரில்லர் படமாக இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது.

