Theme Check

விநோத நோய் காரணமாக ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்.. உதவிகோரும் உறவினர்கள் !!

விநோத நோய் காரணமாக ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்.. உதவிகோரும் உறவினர்கள் !!

விநோத நோய் காரணமாக ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்.. உதவிகோரும் உறவினர்கள் !!
X

நுரையீரல் கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆக்சிஜன் கொடுக்க தினமும் ரூ.1800 செலவு ஆவதால் தமிழக அரசு உதவ கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டிதம்பட்டு பகுதியில் சுவேதா என்ற 19 வயது இளம்பெண், தன்னுடைய பெற்றோரை இழந்து பெரியப்பா கூத்தபெருமாள் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்க முயற்சி செய்தார்.

அப்போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதுகு தண்டுவடம் வளைந்ததால், நுரையீரல் சுருங்கிவிட்டதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் கூறினர். இதனால் சுவேதாவுக்கு இனிமேல் மூச்சுத்தினறல் அதிகம் இருக்கும் என்பதால் அவருக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

secretariate

இதையடுத்து சுவேதாவை வீட்டுக்கு அழைத்து வந்த உறவினர்கள், வீட்டிலிருந்தபடியே அவருக்கு ஆக்சிஜன் செறிவூட்டியை தினமும் ரூ.1800 செலவு செய்து, வாடகைக்கு எடுத்து அவர் சுவாசிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சுவேதாவின் உறவினர்கள் கூறுகையில், சுவேதா ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது, தாய் - தந்தை இருவரும் இறந்துவிட்டனர். தற்போது உடல்நிலை சரி இல்லாததால் அவருக்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை தினசரி வாடகைக்கு அமர்த்தி சுவேதாவுக்கு கொடுத்து வருகிறோம். 24 மணி நேரமும் இந்த ஆக்சிஜன் மூலம்தான் அவர் மூச்சு விடுகிறார். ஆக்சிஜன் இல்லையென்றால் அவர் பெரும் சிரமப்படுகிறார். நாங்கள் விவசாயம் செய்து வருவதால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோம்.

சுவேதாவுக்கு பாண்டிசேரிக்குச் சென்று அதற்குரிய உயர்தர சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it