தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி !!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி !!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி !!
X

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் அரசியல் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியின் உடன்பிறந்த தம்பியும் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மையில் அவருடைய நடிப்பில் உருவான ‘வக்கீல் சாப்’ படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷன்களின் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது. இதையடுத்து தன்னை வீட்டிலேயே அவர் தனிமை படுத்துக்கொண்டதாக பவன் கல்யாணின் மேலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக வக்கீல் சாப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.

Tags:
Next Story
Share it