Theme Check

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !!

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !!

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !!
X

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டடது. அதிகாலை நீண்ட நேரம் குளிர் உணரப்பட்டது. அவ்வப்போது ஒருசில இடங்களில் மழையும் பெய்து வந்தது. ஆனால், அப்படியே குளிர் குறைந்து தற்போது வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

tharpoosani

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை(மார்ச் 15) வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக உள் மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை முந்தைய நாட்களின் இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடும். சென்னையில் இன்று காலை லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 16, 17ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

tharpoosani

தற்போது வெயில் தொடங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகத்தை மறைத்து துணியால் கட்டியப்படி செல்வதை காணமுடிகிறது. மேலும், சாலையோரங்களில் தர்பூசணி மற்றும் பலவகைகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.


newstm.in

Next Story
Share it