Theme Check

கோயில்கள் திறக்கப்படுகிறது… ஆனால், இதற்கு அனுமதி இல்லை..!

கோயில்கள் திறக்கப்படுகிறது… ஆனால், இதற்கு அனுமதி இல்லை..!

கோயில்கள் திறக்கப்படுகிறது… ஆனால், இதற்கு அனுமதி இல்லை..!
X

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா சோதனையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை புரசைவாக்கத்தில் தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், வரும் 28ம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவுள்ளன. கோயில்களில் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை. திருநீறு, குங்குமம் போன்ற பிரசாதங்கள் தட்டில் வைத்து வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகக் கோயில்களில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it