Theme Check

ஐடி ரெய்டில் சிக்கிய தேமுதிக பிரமுகர் – ரூ.12 கோடி பறிமுதல்!!

ஐடி ரெய்டில் சிக்கிய தேமுதிக பிரமுகர் – ரூ.12 கோடி பறிமுதல்!!

ஐடி ரெய்டில் சிக்கிய தேமுதிக பிரமுகர் – ரூ.12 கோடி பறிமுதல்!!
X

தேமுதிக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூரை சேர்ந்த தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 16 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஜெயபிரியா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், நெல்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, வடலூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன.

Income-tax

இந்த சோதனையில் சிட் ஃபண்ட் வணிகத்தின் மூலமாக வருமானம் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து ரொக்கமாகப் பெறப்பட்ட வைப்புத் தொகை, ஆன்லைன் மூலமாக ஆவணங்களை பாதுகாக்காமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பலரிடம் பணம் பெற்ற ஆவணங்களையும் வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதில் சுமார் 250 கோடி கணக்கில் வராத அசையா சொத்துகளை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கணக்கில் வராத பணம் 12 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it