பதற்றம்! இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!!
பதற்றம்! இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!!

இலங்கையில் தொடர்ந்து நிலவும் அசாதாரண சூழல் காரணமாக நாடு முழுவதும் அவசர நிலையை பிறப்பித்து ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோட்டபயா ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டனர்.

உடனடியாக பதவி விலக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர், அப்போது போராட்டக்கார்களில் சிலர் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றி, ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர்.
மேலும் வீட்டு சுவரை இடித்து செங்கற்களை போலீசார் மீது வீசி தாக்கியதால், அங்கு போர்க்களம் போல காட்சி அளித்தது. இப்படி பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு என இலங்கையில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டங்களும் வலுபெற தொடங்கியுள்ளதால், அங்கு அதிரடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்துள்ளது.
newstm.in

