Theme Check

பதற்றம்.. 26 மாவோயிஸ்டுகள் சுற்றிவளைத்து சுட்டுக்கொலை.. போலீஸ் படை நடவடிக்கை !!

பதற்றம்.. 26 மாவோயிஸ்டுகள் சுற்றிவளைத்து சுட்டுக்கொலை.. போலீஸ் படை நடவடிக்கை !!

பதற்றம்.. 26 மாவோயிஸ்டுகள் சுற்றிவளைத்து சுட்டுக்கொலை.. போலீஸ் படை நடவடிக்கை !!
X

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

கோர்சி என்ற இடத்தில் தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீரென கமாண்டோ போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் மாவோயிஸ்ட் அமைப்பில் இடம்பெற்றிருந்த முக்கிய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maoists-killed-in-police

அதேநேரத்தில் காவல்துறை தரப்பில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நாக்பூர் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் பல மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Maoists-killed-in-police

என்கவுண்டர் நடந்த கட்சிரோலி மாவட்டமானது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது. மாவோயிஸ்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது, அதிகாரிகளை கடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க காவல்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it