Theme Check

எல்லையில் பதற்றம்.. லஷ்கர் இ தொய்பாவின் தளபதி சுட்டுக் கொலை!! !!

எல்லையில் பதற்றம்.. லஷ்கர் இ தொய்பாவின் தளபதி சுட்டுக் கொலை!! !!

எல்லையில் பதற்றம்.. லஷ்கர் இ தொய்பாவின் தளபதி சுட்டுக் கொலை!! !!
X

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் லஷ்கர்- இ-தொய்பா தளபதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் காஷ்மீர் போலீசாரும் அங்கு விரைந்தனர்.

குறிப்பாக Sirhama என்ற பகுதியை சுற்றிவளைத்து தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நெருங்குவதை அறிந்த, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். உடனடியாக சுதாகரித்த பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

jamuu

Sirhama பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் இ-தொய்பா தளபதி நிசார் தர் என்று அடையாளம் காணப்பட்டது. இதே போன்று குல்காம் மாவட்டத்தில் டிஎச் போரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.

தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அனந்த்நாத் சிர்ஹாமா பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it