ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி!!
சென்னை மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடைபெற்றுள்ளது. மயிலாப்பூரில் பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். பாதுகாப்பிற்கு இருந்த போலீசை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் குண்டுகளை வீசவில்லை.

சென்னை மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடைபெற்றுள்ளது. மயிலாப்பூரில் பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர்.
பாதுகாப்பிற்கு இருந்த போலீசை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் குண்டுகளை வீசவில்லை.

இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
newstm.in
Tags:
Next Story

