Theme Check

ஆப்கானிஸ்தானில் பதற்றம்! பொதுமக்கள் மத்தியில் துப்பாக்கிச்சூடு!! வீடியோ

ஆப்கானிஸ்தானில் பதற்றம்! பொதுமக்கள் மத்தியில் துப்பாக்கிச்சூடு!! வீடியோ

ஆப்கானிஸ்தானில் பதற்றம்! பொதுமக்கள் மத்தியில் துப்பாக்கிச்சூடு!! வீடியோ
X

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் பொதுமக்கள் இடையே துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டை உலகமே உற்று நோக்கியுள்ளது. ஆப்கனில் தலிபான்கள் கை ஓங்கிய நிலையில் அதிகாரத்தை அவர்களுக்கே விட்டு தர, அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி ஒப்புக்கொண்டார்.

அவர் நாட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் இடைக்கால அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் அலி அகமது ஜலாலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

afghan 1

இந்நிலையில் பழமைவாத தலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதே போல் வெளிநாடுகளை சேர்ந்த மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அங்கிருந்து தங்கள் நாடுகளுக்கு செல்ல முயன்ற போது, தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

afghan 1

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளைப் பாதுகாப்பாக மீட்க அதிபர் பைடன் ஆயிரம் வீரர்களை அங்கு அனுப்பியுள்ளார். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில ஹெலிகாப்டர்கள் வந்த நிலையில், அதில் ஏறி பல அதிகாரிகள் வெளியேறிவிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. அங்கிருந்து 129 இந்தியர்கள் முதல்கட்டமாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்துள்ளனர்.

இந்நிலையில் நொடிக்கு நொடி அங்கு பல்வேறு சம்பவம் நடந்து வருவதால் ஆப்கானிஸ்தான் தற்போது பதற்றத்தில் உள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it