Theme Check

ஆந்திராவில் பயங்கர விபத்து ! 14 பேர் பலி !!

ஆந்திராவில் பயங்கர விபத்து ! 14 பேர் பலி !!

ஆந்திராவில் பயங்கர விபத்து ! 14 பேர் பலி !!
X

ஆந்திராவில் மினி பேருந்து - லாரும் நேருக்கு மோதி நிகழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கர்னூல் அருகே உள்ள மாதபுரம் பகுதியில் அந்த பேருந்து வந்துகொண்டு இருந்த போது,எதிரே வந்த லாரியுடன், மினி பேருந்து திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புபடையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்தை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

Tags:
Next Story
Share it