சென்னையில் இரவில் பயங்கரம்.. தீ பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு !!
சென்னையில் இரவில் பயங்கரம்.. தீ பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு !!

திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த மக்கள் அலறியடைத்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், இரவு 7.30 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதலில் லேசான தீ பற்றிய நிலையில் சிறிது நேரத்தில் தீயில் வேகம் அதிகரித்து மளமளவென எரிந்தது.

இந்த தீயை அணைப்பதற்கு திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இதற்குள் கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால், தீயணைப்பு வீரர்கள் போராடினர். அதே சமயம் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில், கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதேநேரத்தில் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
newstm.in

