Theme Check

பயங்கர கார் விபத்து.. பட்டம்வென்ற மாடல் அழகிகள் பலி.. பெரும் சோகம் !!

பயங்கர கார் விபத்து.. பட்டம்வென்ற மாடல் அழகிகள் பலி.. பெரும் சோகம் !!

பயங்கர கார் விபத்து.. பட்டம்வென்ற மாடல் அழகிகள் பலி.. பெரும் சோகம் !!
X

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆன்சி கபீர் (26). கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த கேரள மாடல் அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார். இதே போட்டியில் கடைசி வரை போராடி ஆன்சியிடம் பட்டத்தை இழந்தவர் அஞ்சனா சாஜன் (24). அஞ்சனா சாஜனாவின் சொந்த ஊர் திருச்சூர் ஆகும். அஞ்சனா ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார்.

Ansi Kabeer, Anjana ShajanAnsi Kabeer, Anjana Shajan

இந்த அழகி போட்டிக்கு பிறகு இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இந்த நிலையில் நேற்று இரவு ஆன்சி கபீர், அஞ்சனா சாஜன் உள்பட 4 பேர் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பிறகு நிகழ்ச்சி முடிந்து காரில் கொச்சிக்கு சென்றுக்கொண்டிருந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில் கார் எர்ணாகுளம் புறவழிச்சாலையில் திடீரென விபத்தில் சிக்கியது.

Ansi Kabeer, Anjana Shajan

அதாவது, எர்ணாகுளம் புறவழிச்சாலையில் பைக் மீது அவர்களது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டு சாலையோர இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற ஆன்சி கபீர், அவரது தோழியான இரண்டாவது இடம்பிடித்த அஞ்சனா ஷாஜன் ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Ansi Kabeer, Anjana Shajan

அவர்களுடன் காரில் பயணம் செய்த அவர்களது நண்பர்களான , முகமது ஆசிக் (30), அப்துல் ரஹ்மான் (28 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Ansi Kabeer, Anjana Shajan

மேலும் இந்த விபத்து கேரளாவை உலுக்கிய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Ansi Kabeer, Anjana Shajan

newstm.in

Tags:
Next Story
Share it