Theme Check

மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே பயங்கர மோதல்!!

மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே பயங்கர மோதல்!!

மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே பயங்கர மோதல்!!
X

சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிபி அரசன் என்ற மாணவன் 10 ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுத வந்துள்ளார். அங்கு கோனாம்பேடு பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பொதுத் தேர்வு எழுதுவதற்காக வந்தனர்.

அப்பொழுது கோனாம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவிகளை காமராஜர் நகர் அரசினர் பள்ளி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அம்மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாலை தேர்வு முடித்துவிட்டு பள்ளியின் வாயிலில் நின்று கொண்டிருந்த மாணவன் சிபி அரசனை அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனின் உதவியுடன் உள்ளூரைச் சேர்ந்த 20 பேரை கொண்டு பள்ளி வளாகத்தில் வைத்து கடுமையாக தாக்கினர்.

avadi school

நடந்த சண்டையை தடுக்க வந்த சிலரையும் அந்தகும்பல் கடுமையாக தாக்கியது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததார்.

தகவலறிந்து வந்த ஆவடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக மாணவனை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

avadi school

பின்னர் எக்ஸ்ரே எடுக்க அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தையும் பெற்றோரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it