தலைநகரில் பயங்கர தீ விபத்து...80-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகிய நாசம்!!
தலைநகரில் பயங்கர தீ விபத்து...80-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகிய நாசம்!!

டெல்லி ஜாமியா நகரில் உள்ள மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று அதிகாலை 5.02 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், 80-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சாம்பலானது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சுமார் 7 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து டெல்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கர்க் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் மொத்தம் 10 கார்கள், 1 மோட்டார் சைக்கிள், 2 ஸ்கூட்டி, 30 புதிய இ-ரிக்ஷாக்கள் மற்றும் 50 பழைய இ-ரிக்ஷாக்கள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை என்று கூறினார்.
டெல்லி ஜாமியா நகரில் உள்ள மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

