Theme Check

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ – 8 பேர் பலி!!

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ – 8 பேர் பலி!!

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ – 8 பேர் பலி!!
X

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

டோலானா என்ற இடத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை அணைத்து, சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எட்டு தொழிலாளர்கள் தீ விபத்தில் உயிரிழந்து இருக்கக்கூடிய நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

hapur fire

தொழிற்சாலையில் தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்கும் அனைத்து முயற்சிகளிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகள் மற்றும் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it