Theme Check

புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அருகே பயங்கர தீ விபத்து! பெரும் சேதம் !!

புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அருகே பயங்கர தீ விபத்து! பெரும் சேதம் !!

புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அருகே பயங்கர தீ விபத்து! பெரும் சேதம் !!
X

ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில், இந்தியாவின் இந்து மத புனித கோயில்களில் ஒன்று. இது ஒரு கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து மத தாய் கடவுளாக கருதப்படும் வைஷ்ணவ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு குகை கோவில். குகையின் நீளம் சுமார் 30 மீட்டரும், உயரம் 1.5 மீட்டரும் கொண்டது.

இந்நிலையில் இந்தக் கோவிலின் அருகில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கொழுந்து விட்டு எரிந்த தீயால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இது தொடர்பாக புகைப்படங்கள் உள்ளூர் வாசிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டு சுமார் 45 நிமிடங்களில் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிபத்தில் ஒரு சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. பெரியளவில் காயம் யாருக்கும் ஏற்படவில்லை என மீட்புகுழுவினர் கூறியுள்ளனர்.

எனினும் வணிகம் சார்ந்த கட்டிடம் முழுமையாக எரிந்தது. அந்த கட்டிடத்தில் பணம் எண்ணும் மையம் செயல்பட்டு வந்தது. இதனால் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் ரொக்கம் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் எவ்வளவு பணம் எரிந்தது என்பது குறித்த தகவல் இல்லை. தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it