சுடுகாட்டில் பயங்கரம்..!! உறவுக்கார பெண்ணின் எரியும் சிதையில் குதித்து இளைஞன் தற்கொலை..!!
சுடுகாட்டில் பயங்கரம்..!! உறவுக்கார பெண்ணின் எரியும் சிதையில் குதித்து இளைஞன் தற்கொலை..!!

கடந்த 9-ம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள மஜ்காவன் பகுதியில் இருக்கும் ஜோதி என்பவர் வயல் வெளிக்குச் சென்ற போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் ஜோதியின் குடும்பத்தினர் அவரைத் தேடி அலைந்தனர்.

இந்த நிலையில், அடுத்த நாள் காலை ஜோதியின் உடல் கிணற்றில் மிதந்ததை கண்டு பொதுமக்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு வெள்ளிக்கிழமையன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அவரது அத்தை மகன் கரண், 420 கிமீ தொலைவில் இருந்து டூவீலரில் பயணம் செய்து மஜ்காவனுக்கு வந்தார். உறவினர்கள் ஜோதியின் உடலுக்கு தீமூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்ட நிலையில், கரண் எரியும் சடலத்தை நோக்கிச் சென்று தீயில் விழுந்துவிட்டார்.
கரண் தீயில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கரண் பரிதாபமாகச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து கரணின் உடல் அவரின் அத்தை மகள் ஜோதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே தகனம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 21 வயதாகும் கரணின் இந்த முடிவு ஒட்டுமொத்த கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

