Theme Check

பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது எமனாக வந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..!

பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது எமனாக வந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..!

பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது எமனாக வந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..!
X

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தஞ்சாவூர் மேலவந்தசாவடி பகுதியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை சாமிநாதன்(49), மகன்கள் தவப்பிரியன் (15), கமலேஷ் (12) மற்றும் இவர்களது தாய் மாமா சேகர் ஆகிய 4 பேர் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

தஞ்சாவூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை காரில் வந்த நான்கு பேரும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். இவர்கள், சத்திரப்பட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில், நடந்து சென்ற நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதில் சாமிநாதன், தாய் மாமா சேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த இளைய மகன் கமலேஷ் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கும், கமலேஷ் பழனி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதில், சிகிச்சை பலனின்றி சிறுவன் கமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தவப்பிரியன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it