Theme Check

பாகிஸ்தானில் பயங்கரம்… பொம்மை என நினைத்து விளையாடிய 3 குழந்தைகள் பலி..!

பாகிஸ்தானில் பயங்கரம்… பொம்மை என நினைத்து விளையாடிய 3 குழந்தைகள் பலி..!

பாகிஸ்தானில் பயங்கரம்… பொம்மை என நினைத்து விளையாடிய 3 குழந்தைகள் பலி..!
X

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் உள்ள மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில், குழந்தைகள் சிலர் தங்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பொம்மை போன்ற பொருள் ஒன்று கீழே கிடந்துள்ளது. இதனை அந்தக் குழந்தைகள் எடுத்து விளையாடியுள்ளனர். ஆனால், பொம்மை போன்று இருந்தது வெடிகுண்டு ஆகும். இது தெரியாமல், குழந்தைகள் ஆசையுடன் விளையாடியுள்னர்.

இந்நிலையில், அந்த பொம்மை வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உடல் சிதறி பலியாகினர். இவர்கள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தச் சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Tags:
Next Story
Share it