தலைநகரில் பயங்கரம்.. செயின் பறிப்பைத் தடுக்க முயன்ற இளம்பெண் குத்திக்கொலை !
தலைநகரில் பயங்கரம்.. செயின் பறிப்பைத் தடுக்க முயன்ற இளம்பெண் குத்திக்கொலை !

செயின் பறிப்பைத் தடுக்க முயன்ற இளம்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடமேற்கு பகுதியான ஆதர்ஷ் நகர் பகுதியைச் சேர்ந்த சிம்ரன் கவுர் என்ற பெண் தனது தாயார், 2 வயது குழந்தையுடன் நேற்றிரவு கடைவீதிக்கு சென்றுள்ளார். சுமார் 9.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர்.

அவர்கள் சென்ற வழியில் திடீரென்று குறுக்கிட்ட நபர் ஒருவர் சிம்ரன் அணிந்திருந்த செயினைப் பறிக்க முயன்றுள்ளார். ஆனால் செயினை விடாத சிம்ரன் அந்த நபரைப் பிடித்து சத்தம்போட்டுள்ளார். பெண்ணின் பிடியில் இருந்து தப்பமுயன்ற அந்நபர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் எழுந்து ஓடாமல் அப்பெண்ணை நோக்கி அவர் நெருங்கியுள்ளார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிம்ரனைக் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் அப்பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிம்ரன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகியுள்ளது.

அதனை அடிப்படையாக வைத்து குற்றவாளியினைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாய், மகளுடன் திரும்பி பெண் கொள்ளையனால் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

