Theme Check

சாலையில் நடந்த பயங்கரம்.. 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் !!

சாலையில் நடந்த பயங்கரம்.. 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் !!

சாலையில் நடந்த பயங்கரம்.. 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் !!
X

ரோந்து வாகனம் மீது காரை கொண்டு மோதிய 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சாதாரண இளைஞரும் கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு அப்பாவி மக்களை சுட்டுக்கொள்ளும் கொடூரம் நடந்துவருகிறது. அண்மையில் தொடக்கப்பள்ளியில் புகுந்த இளைஞர் 19 பள்ளி குழந்தைகளை சுட்டுக்கொன்ற கொடூரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

usa gun

அடுத்த சில நாட்களிலேயே மருத்துவமனையில் ஒருவர் 5 பேரை சுட்டுக்கொன்றார். இப்படியாக நடக்கும் நிகழ்வுகளையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் கார் திருடப்பட்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அங்கு வந்த வேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்டனர். ஆனால், அந்த கார் வேகமாக சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து காரில் மோதியது. இதையடுத்து, அந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

usa gun

இந்த துப்பாக்கிச்சூட்டில் காரை ஓட்டிவந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தான். அந்த காரில் இருந்த மேலும் 2 சிறுவர்கள் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர். சிறுவன் ஓட்டிவந்த கார் வார்கொல்ட் பகுதியில் திருடப்பட்டது தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றதாக ஒருதரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it