Theme Check

ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: போலீசார் இருவர் பலி, 5 பேர் கவலைக்கிடம் !!

ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: போலீசார் இருவர் பலி, 5 பேர் கவலைக்கிடம் !!

ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: போலீசார் இருவர் பலி, 5 பேர் கவலைக்கிடம் !!
X

ஸ்ரீநகரில் ஆயுதங்கள் ஏந்திய காவல் துறையினர் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் ஸிவான் பகுதியில் போலீஸ் ரோந்து சென்றுள்ளனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பின்னர் பயங்கரவாதிகள் தப்பியோடிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளான அந்த வாகனத்தில் இருந்த 14 காவலர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

indian army

எனினும், பலத்த காயம் அடைந்த இரண்டு காவல்துறையினர் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தாக்குதல் நடந்த இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால் தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் சிக்குவர் எனவும் கூறுகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it