செங்கல்பட்டு டோல்கேட்டில் பயங்கர மோதல்.. ஊழியர்களே ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்
செங்கல்பட்டு டோல்கேட்டில் பயங்கர மோதல்.. ஊழியர்களே ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்தது அம்பலம்....

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நடந்த வன்முறையின் போது திருடப்பட்டதாக கூறப்பட்ட பணம் ஊழியர்களே கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வாகனம் கடந்து செல்லும் விவகாரம் தொடர்பாக கடந்த 26ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் சுங்கச்சாவடிகளை அடித்து நொறுக்கினர்.
பின்னர் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதலை கட்டுப்பபடுத்தினர். கடுமையாக சேதமடைந்த சுங்கச்சாவடியை சீரமைக்கும் வரை கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டு வாகனங்கள் இலவசமாக சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.
இந்நிலையில் மோதலின் போது சுங்கச்சாவடிக்குள் இருந்த ரூ.18 லட்சம் பணம் திருடுபோனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
அதில் ஒருவர் பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுங்கச்சாவடி ஊழியர்களே பணத்தை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அங்கு வேலை பார்த்துவந்த செந்தில் மற்றும் பரமசிவத்திடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
newstm.in




